Ratio and Proportion திறனாய்வுத் தேர்வு

 Ratio and Proportion

திறனாய்வுத் தேர்வு 

 Ratio and Proportion

1. மொத்த ரூபாயில் இருந்து அ,ஆ,இ மற்றும் ஈ க்கு 3:4:9:10 என்ற விகிதத்தில் பிரித்து கொடுக்கப்படுகிறது. இதில் இ-க்கு, ஆ-விற்கு பிரித்து கொடுக்கப்பட்ட தொகையை விட ரூ. 2580 அதிகமாக கிடைக்கின்றது எனில், மொத்த தொகையில் அ மற்றும் ஈ-க்கு கிடைக்கும் ரூபாய் எவ்வளவு ?

விடை : ரூ.6708

விளக்கம் :

அ,ஆ,இ மற்றும் ஈ க்கு கிடைக்கும் தொகையை ரூ.3x,4x, 9x மற்றும் 10x எனக் கொள்வோம்.

x- ன் மதிப்பு → இ-யின் தொகை ஆ-வின் தொகை = 2580

9x - 4x = 2580

5x = 2580

x = 2580 / 5

x = 516

மொத்த தொகையில் அ மற்றும் ஈ க்கு கிடைக்கும் ரூபாய் = 3× +10x

= 13x

= 13 * 516

= ரூ.6708


2. ஒரு பள்ளியில் பயிலும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 6020. இதில் மாணவிகளின் எண்ணிக்கை 2800 எனில், மொத்த நபர்களில் மாணவ, மாணவிகளின் விகிதம் என்ன ?

விடை : 23 : 20

விளக்கம் :

பள்ளியில் உள்ள மொத்த நபர்களின்

எண்ணிக்கை = 6020

மாணவிகளின் எண்ணிக்கை

= 2800

மாணவர்களின் எண்ணிக்கை

 = 6020 - 2800

= 3220

பள்ளியில் உள்ள மாணவ,

விகிதம் = 3220 : 2800

= 23:20


3. 5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன ?

விடை : 3/2

விளக்கம் :

ஒரு மாம்பழத்தின் விலையினை ரூ.x எனவும், ஒரு ஆரஞ்சுப்பழத்தின் விலையினை ரூ.y எனவும் கொள்க.

5x + 4y = 3x + 7y

5x - 3x = 7y - 4y

2x = 3y

x/y = 3/2


4. 76 என்ற எண்ணானது 7:5:3:4 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது எனில், அவற்றில் சிறிய எண்ணின் மதிப்பினைக் காண்க?

விடை : 12

விளக்கம் :

 =   7:5:3:4 = 76 

விகிதங்களின் கூடுதல்  

   =   7+5+ 3 + 4

  = 19

சிறிய மதிப்பு = 76* (3/19)

= 4 * 3

= 12







Comments

Popular posts from this blog

திறனாய்வுத் தேர்வு Area

Age Problems திறனாய்வுத் தேர்வு..!

Numbers Formulae Some important formulas