Probability திறனாய்வுத் தேர்வு..!
Probability
திறனாய்வுத் தேர்வு..!
Mr.Maths,
1.இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு?
விடை : 1/2
விளக்கம் :
கூறுவெளி S = {HH, HT, TH, TT}
n(S) = 4
நிகழ்ச்சிகணம் E = {HT, TH}
n(E) = 2
நிகழ்தகவு P(E) = n(E)/n(S)
= 2/4 = 1/2
2. சீரான பகடை ஒன்று உருட்டப்படுகிறது. ஒற்றை எண் பகடையில் தோன்றுவதற்கான நிகழ்ச்சியின்நி கழ்தகவு?
விடை : 1/2
விளக்கம் :
கூறுவெளி S = {1, 2, 3, 4, 5,6}
நிகழ்ச்சிகணம் E = {1,3,5}
நிகழ்தகவு P(E) = n(E)/n(S)
= 3/6
= 1/2
3. ஒரு கனச்சதுரத்தை ஒருமுறை உருட்டினால் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு அல்லது வாய்ப்பு என்ன?
விடை : 1/2
விளக்கம் :
கூறுவெளி S = {1, 2, 3, 4, 5, 6}
n(S) = 6
இரட்டை எண் கிடைக்கும் நிகழ்ச்சி
E = {2, 4, 6}
n(E) = 3
நிகழ்தகவு P(E) = n(E)/n(S)
= 3/6
= 1/2
Comments
Post a Comment