திறனாய்வுத் தேர்வு Numbers
திறனாய்வுத் தேர்வு
Numbers,
Mr.Maths,
1. ஒரு மாணவன் தேர்வில் சரியான மதிப்பெண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக தவறான மதிப்பெண் பெறுகின்றான். இவ்விரண்டின் கூடுதல் 48 எனில், அம்மாணவன் தேர்வில் எத்தனை கேள்விகளை எழுதி இருப்பான் ?
விடை : 16
விளக்கம் :
தேர்வில் மாணவன் பெற்ற சரியானம திப்பெண்களை x எனவும் தவறாக பெற்றம திப்பெண்களை 2x எனவும் கொள்வோம்.
x + 2x = 48
3x = 48
X = 48/3 X = 16
2. நான்கு இரட்டைப்படை எண்களின் சராசரி மதிப்பு 27 எனில், இந்நான்கு எண்களில் பெரிய எண்ணினைக் காண்க.
விடை : 30
விளக்கம் :
நான்கு இரட்டைப்படை எண்களை x, (x + 2), (x+4) மற்றும் (x + 6) எனக் கொள்வோம். நான்கு எண்களின் கூட்டுத்தொகை = 274
= 108
x + (x + 2) + ( x + 4) + ( x + 6) = = 108
4x+12 =108
4x=108-12
4x = 96
x = 96 / 4
X = 24 நான்கு எண்களில்
பெரிய எண் = x + 6
= 24 + 6
= 30
3. ஒரு விடுதியில் 12 மாணவர்களும் சில மாணவிகளும் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு கொடுக்கப்படும் சாராசரி உணவு 12 கிலோ. மாணவர்கள் மட்டும் எடுத்துகொள்ளும் சராசரி உணவு 16 கிலோ மற்றும் மாணவிகள் மட்டும் எடுத்துக்கொள்ளும் சராசரி உணவு 8 கிலோ எனில், அவ்விடுதியில் உள்ள மாணவிகளின் எண்ணைக்கை காண்க ?
விடை : 12
விளக்கம் : மாணவிகளின் எண்ணிக்கையை G எனக் கொள்வோம்.
(12+ G) * 12 = (12* 16) + (8 * G) 144+12G =192 +8G
12G - 8G = 192 - 144
4G = 48 G=48/4 மாணவிகளின் எண்ணிக்கை = 12
4. மூன்று எண்களை எடுத்துக் கொள்வோம். அதில் மூன்றாவது எண் இரண்டாவது எண்ணை விட 2 மடங்கு அதிகமானது மற்றும் இரண்டாவது எண் முதல் எண்ணினை விட 4 மடங்கு அதிகமானது. இம்மூன்று எண்களின் சராசரி 78 எனில் முதல் எண்ணினைக் காண்க ?
விடை : 18
விளக்கம் :
முதல் எண்ணினை x எனக் கொள்வோம்.
2 வது எண் = 4 x
3 வது எண் = 8 x
x + 4x + 8 x) = ( 78 * 3)
13x=234
x = 234 / 13
முதல் எண், x = 18
Comments
Post a Comment