Chain rule :திறனாய்வுத் தேர்வு
Chain rule :
திறனாய்வுத் தேர்வு
Mr.Maths,
1.20 ஆட்கள் 6 நாட்களில் 112மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால் 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளச் சுவரைக் கட்டி முடிப்பர்?
விடை : 70மீ
விளக்கம் :
ஆட்களின் எண்ணிக்கை = 20 : 25 நாட்கள் = 6:3
சுவரின் நீளம் = 112:x ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது சுவரின் நீளமும் அதிகரிக்கும். எனவே இது
நேர் மாறல் ஆகும். 20:25:112:x
நாட்கள் குறையும் பொழுது சுவரின் நீளமும் குறையும். எனவே இது நேர்மாறல் ஆகும்.
6:3:112: x
20:6:x:: 25:3:112
20*6*x = 25 * 3 * 112
= (25*3*112) / (20 * 6)
x = 8400 / 120
X = 70மீ
2. 6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
விடை : 20 நாட்கள்
விளக்கம் :
ஆண்களின் எண்ணிக்கை = 6 : 9
ஒரு நாளில் வேலை செய்யும் நேரம் = 10:8 நாட்கள் = 24 : x
ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது, நாட்களின் எண்ணிக்கை குறையும். எனவே இது எதிர் மாறல் ஆகும். 9:6:: 24:x
ஒரு நாளில் வேலை செய்யும் நேரத்தின் கால நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே இது எதிர் மாறல் ஆகும்.
அளவு குறையும் பொழுது,
8:10:24: x
எனவே 9:8: x: : 6: 10 : 24
9*8*x=6* 10 * 24
x = (6*10*24) / (9* 8)
x= 20 நாட்கள்
3.7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாள்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள்?
விடை :
28 நாள்களில் முடிப்பார்கள்
விளக்கம் :
கண்டுபிடிக்க வேண்டிய நாட்களில்
எண்ணிக்கையை x எனக் கொள்ள
ஆட்களின் எண்ணிக்கை ஆதிக்க ரிக்கும் நாள்களின் எண்ணிக்கை குறையும் இது எதிர்மாறல் ஆகும்.
7:13 :: 52: x
7* 52 13 *x
x = (7 *52) / 13
X = 28
13 ஆட்கள் இந்த 28 நாள்களில் முடிப்பார்கள்.
Comments
Post a Comment