அறிவுக்கூர்மைத் தேர்வு : 02 ..!
அறிவுக்கூர்மைத்
தேர்வு : 02 ..!
Mr.Maths,
1. ROAD என்பது WTFI எழுதப்பட்டால், BEAT என்பது என்ன?
விடை : GJFY
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் ஒவ்வொரு எழுத்தும் 5 எழுத்துக்கள் முன்னே நகற்ந்து குறியீடப்பட்டுள்ளது.
அது அதன் போல் BEAT வார்த்தையிலும் அதன் எழுத்துக்கள் அகவரிசையில் 5 எழுத்துக்கள் முன்னே நகர்ந்து வரவேண்டும். அதாவது, BEAT இல் B என்ற எழுத்து 5 எழுத்துக்கள் முன்னே நகர்ந்து G எனும் அவன்னம்மே மற்ற எழுத்துக்களான E, A, T ஆகியவை முன்னே நகர்ந்து J, F, Y எனவும் எழுத வேண்டும்.
2. 16, 33, 65, 131, ?, 523
விடை: 261
விளக்கம்:
தொகுப்பில் முதல் எண்ணை 2 ஆல் பெருக்கி பிறகு 1 ஆல் கூட்டல் செய்து வரும் எண்னை அடுத்தபடியாக 2 ஆல் பெருக்கி பின்னர் 1 ஐ கழித்து கணக்கிட வேண்டும்.
16* 2+1 = 33
33* 2- 1 = 65
65*2 + 1 = 131
விடுபட்ட எண் 131*2 -1= 261
261 * 2 + 1 = 523
3. ராம் வாங்கிய 36 மாம்பழங்களில் 5 மாம்பழங்கள் அழுகி விட்டன அழுகிய மாம்பழங்களின் சதவீதம் என்ன?
விடை: 13.89%
விளக்கம்:
இங்கு 36 மாம்பழங்களில் 5 மாம்பழங்கள் அழுகி விட்டன.
எனவே, அழுகிய மாம்பழங்களின்
(5/36) * 100
= (5 * 25)/9
= 125/9
= 13.89%
Comments
Post a Comment