அறிவுக்கூர்மைத் தேர்வு : 01
அறிவுக்கூர்மைத்
தேர்வு : 01
Mr.Maths,
1. கீழுள்ள சொற்களை வரிசைப்படுத்துக
1) மேஜை
2) மரம்
3) மரக்கட்டை
4 விதை
5)தாவரம்.
விடை: 4, 5,2,3,1
விளக்கம்:
முதலில் விதை விதைக்கப்படுகிறது. அதுவே தாவரமாகிறது பிறகு மரமாக வளர்கிறது பின்பு மரக்கட்டையாகி மேஜையாக வெட்டப்பட்டு உருவாகிறது.
2. EIGHTY: GIEYTH : OUTPUT: ?
விடை: TUOTUP
விளக்கம்:
தரப்பட்டுள்ள தொகுப்பில் மொத்தம் 6 எழுத்துகள் உள்ளன. அதை முதல் மூன்று எழுத்துக்களாகவும் இரண்டாவது மூன்று எழுத்துக்களாகவும் பிரித்துக்கொள்ளவும். பிரிக்கப்பட்ட மூன்று எழுத்து தொகுப்புகளில் 2 ஆம் எழுத்தை அப்படியே வைத்து, 1 மற்றும் 3 ஆம் எழுத்துக்களை இடம் மாற்றி எழுதி விடை காண வேண்டும். எனவே, கேட்கப்பட்டுள்ள OUTPUT என்பதில் முதல் மூன்று எழுத்து தொகுப்பில் அதாவது OUT இல் விதிகளை பயன்படுத்தி TUO எனவும், இரண்டாம் மூன்று எழுத்து தொகுப்பில் அதாவது PUT இல் விதிகளை பயன்படுத்தி TUP எனவும் வரவேண்டும். ஆக, OUTPUT TUOTUP என்பதே விடை.
3.17,15,9, 13, 21, 7, 32 ஆகியவற்றின் இடைநிலை காண்க.
விடை: 15
விளக்கம்:
மதிப்புகளை ஏறு வரிசையில் அமைத்தால் 7, 9,13,15,17,21, 32 எனக் கிடைக்கிறது.
இங்கு,n=7 (ஒற்றைப்படை எண்) இடைநிலை = நடுமதிப்பு
(n+1)/2 இன்மதிப்பு
= (7+1)/2 இன்மதிப்பு =4ஆம் இடத்தில் உள்ள எண்
எனவே, இடைநிலை = 15
Comments
Post a Comment